முச்சந்தி

கர்தினால் தொடர்பில் ரஞ்சன் கூறியது என்ன ?

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை தொடர்பில் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குரல் பதிவு தொடர்பான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சிவில் செயற்பாட்டாளரான நாமல் குமாரவினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குரல் பதிவு தொடர்பான தகவல்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ள நாமல் குமார இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

இலங்கையில் கத்தோலிக்கர்களின் தலைவராக கருதப்படும் பேராயார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அடுத்த பாப்பரசர் தெரிவின் போதான 12 பேரிடையே இருக்கின்றார். அவர் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால் உலக வாழ் கத்தோலிக்கர்களுக்கும் அவரால் சேவை செய்ய முடியும். இவ்வாறான பேராயர் தொடர்பில் நடிகரான ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். பேராயர் இளைஞர்களுடன் தவாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இது தொடர்பான சாட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க அந்த குரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க போன்றோர் கூறும் கருத்துக்களை நாட்டு மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவு தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நான் சீஐடியில் முறையிட்டுள்ளதுடன், இது தொடர்பில் அறிவிக்குமாறு பேராயருக்கு எழுத்து மூலமும் அறிவித்துள்ளேன். இதேவேளை ஜனாதிபதியும் இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி சீஐடியினருக்கு அறிவித்து குறித்த குரல் பதிவு தொடர்பில் ஆராய்ந்து ரஞ்சன் ராமநாயக்க பொய் கூறுவாராக இருந்தால் மதத் தலைவரை அவமதித்த குற்றத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதனால் இந்த குரல் பதிவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவே இங்கு வந்துள்ளேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button