கவிதைகள்

மன்னித்துவிடு … கவிதை… முல்லைஅமுதன்

இந் நாளில் புதிதாய் அவதாரம் எடுப்பார்
என பேசிக்கொன்டார்கள்.

என் கணக்கில் ஏதுமில்லை.
உன்னிடம் இருக்கலாம்.
அனாலும்,

இனியொரு அவதாரம் எதற்கு என்பதையே
அவனிடம் நான் முன்வைக்கும் வினாவாக இருக்கமுடியும்.
முப்பது நாள் அல்ல..

முன்னூறு ஆண்டுகளெனினும்
உயிர்ப்பிக்காத குழந்தைகளை,

காணாமலேயே ஆக்கப்பட்ட
அண்ணனை,
புதையுண்ட என் தாய் நிலத்தை..
வல்லாண்மைகளின் கைகளில்
வலிய ஆயுதங்கள் கோரப்பசியுடன் இன்னமும்…
மன்னித்துவிடு என் தேவனே!

முழந்தாளிட்டு கோரிக்கை விடுக்கிறேன்..
யாவற்றையும் உயிர்ப்பிக்க முடியுமெனில்..
வலியவைகளை உன் கைகளில் கொண்டு வெளியே வா!

முல்லைஅமுதன்
26/12/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *