ஏப்ரலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பாக தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னல் நிகழ்வுகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் கண்டியில் அறிவித்திருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, புதிய வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
![]()