அடுத்தடுத்து இந்தியாவுக்கு சென்றாலும் ரணிலை கவனத்தில் கொள்ளாத மோடி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்துக்கு முன்னரும் பின்னரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளதன் பின்னணியில், இந்தியாவுடன் தனக்கிருக்கும் தொடர்புகள் குறித்து வெளிப்படுத்துவது நோக்கமாக இருந்தாலும், ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் ரணில் விக்ரமசிங்க, எட்கா ஒப்பந்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். கையொப்பமிடாத எட்கா ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பை ரணில் வெளியிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா செல்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு முன்பாக இந்தியாவிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததை நாட்டுக்குக் காட்டுவதற்காக, தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்திற்கு இந்திய அரசிடமிருந்தோ அல்லது இந்திய உயர் ஸ்தானிகராலயத்திடமிருந்தோ எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இலங்கை திரும்பிய ரணில் விக்ரமசிங்க, தற்போது மீண்டும் ஒருமுறை இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னரும் பின்னரும் இந்திய அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்துள்ளது போல் நாட்டுக்கு காட்டவே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இம்முறையும் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்திற்கு இந்திய அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இந்தியப் பிரதமரின் வழிகாட்டியான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவேந்தல் விழாவில் கலந்து கொள்வதற்காகவே இம்முறை அவர் இந்திய சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()