சோழன் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் வசித்து வரும் நஜிமுல் ஹக் மட்டும் பாத்திமா நஸ்ரின் போன்றோரின் நான்கு வயது மகனான ஆரிப், தொடர் பயிற்சியின் காரணமாக கிடைத்த அதிக ஞாபகத் திறன் மூலம் மனித உடலின் முக்கிய எலும்புகல்  41 இன் பெயர்களை 13:46 நொடிகளிலும், பவர் ஆஃப் டென்(power of ten) எண்களை ஒரு நிமிடம் மற்றும் 6 நொடிகள்,  41 பெரிய எலும்புகளுடன் இணைந்திருக்கும் மற்றைய எலும்புகளின் பெயர்களை  ஒப்புவித்தார்.

அத்துடன் ஒன்று முதல் 100 வரையான ஓடினல்(Ordinal)எண்களை 42 நொடிகளிலும், அனைத்து டெசிமல்(Decimal) எண்களையும் ஒரு நிமிடம் மற்றும் 17 நொடிகளில் ஒப்புவித்த அதேவேளை அவற்றை வேகமாக எழுதியும் காட்டினார்.

நடுவர்கள் குறிப்பிட்ட எலும்புகளை துல்லியமான அடையாளம் காட்டிய அதேவேளை எலும்புகள் இருக்கும் இடங்களையும் சரியாகத் தொட்டுக் காட்டினார்.

40 வரையான லார்ஜ் நம்பர்சை(Big numbers) 4 நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் வாசித்தார். அனைத்து ப்ராக்சன்(fraction) எண்களையும் எழுதிய அதேவேளை சரளமாக வாசிக்கவும் செய்தார்.

டெசிமல்களை (Decimals) ப்ராக்சனாக( fractions) மாற்றிய அதேவேளை ப்ராக்சன்களை டெசிமல்சாக மாற்றினார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரைவாக கூறியும், எழுதியும், வாசித்தும் ஆரிப் செய்த முயற்சியை, உலக சாதனையாக சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தனர் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் திரு.கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு.எம்.தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன்   விக்ணேஷ்வர ராஜா,
தலைமைச் செயற்குழு உறுப்பினரான இயன்முறை மருத்துவர் திரு.மொஹமட் நஸ்மி மற்றும் செயற்குழு உறுப்பினரான திரு.எம்.எஸ்.எம். பர்சான் போன்றோர்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் நடத்திய இந்த நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கிண்ணியா பிரதேசச் செயலாளர் எம்.எச்.மொஹமட் கனி அவர்கள் முன்னிலை வகித்தார்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ச்.ஹீனதுல் முனவ்ரா சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்.எம்.எச். மொஹமட் ரிஸ்வி, மருத்துவர் ஏ.எம்.மொஹமட் அஜித்,
மருத்துவர் ஏ.எச்.சமீம், பாதுகாப்புத்துறையின் வெடிமருந்துப் பிரிவின் துணைக் கட்டுப்பாட்டு அலுவலர் .மொஹமட் இக்ரிமா,
மருத்துவர்.எம்.எம்.ஹில்மி, கின்னியாவின் முன்னால் சேர்மன் எஸ்.எச்.எம்.நலீம், எம்.எச்.எம். ராபி,எம்.சீ.எம்.நவாஸ்,
கிண்ணியா மத்திய கல்லூரியின் தலைமை ஆசிரியர் மொஹமட் நஜாத், பணி நிறைவு பெற்ற ஆசிரியர் எம்.எச்.மொஹமட் ஹசன் போன்றோர் பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் மற்றும் அவருடைய பெற்றோரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் ஆரிப்பிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவு கேடயம், தங்கப்பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *