இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது ; மாவை சேனாதிராஜா குறித்து சுமந்திரன் கருத்து

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் எந்தப் பயனுமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ‘மாவை சேனாதிராஜா இராஜினாமா செய்திருக்கிறார். அதனைக் கட்சியின் செயலாளர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதன் பின்னர் இராஜினாமாவை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ‘இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. இராஜினாமா செய்து இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் எந்தப் பயனுமில்லை’ எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button