பிரதமர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில்இடம்பெற்றது. இதன்போது தலைமன்னார் பகுதியில் படையினர் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள் பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளை மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், இந்தியாவிற்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தமது யாத்திரிகைக்கான விமான பயணக்கட்டணம் அதிகரித்துள்ளமையையையும் கடவுசீட்டை பெறுவதற்காக அவர்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்து கலாசார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுவதையும் செல்வம் அடைக்கலநாதனிடம் சுட்டிக்காட்டினர்.

அதனைத் தளர்த்துமாறும் விமான கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதன்காரணமாக ஐயப்ப சாமி பக்தர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினருடன் பிரதமரை சந்தித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *