முச்சந்தி

ஹட்டன்- கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று  இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ஹட்டன் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்டி பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 21.12.2024 அன்று காலை 10 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 50 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button