ஜெர்மனி கிறிஸ்துமஸ் மார்க்கெட் கூட்டத்தில் திடீரென புகுந்த கார்; 2 பேர் பலி

ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்து அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 50 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார் தாக்குதலை அடுத்து மார்க்கெட் பகுதிக்கு அம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் விரைந்து வந்ததுடன்,  பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *