கலாநிதி பட்டத்தை எடுத்து வருவதற்கு ரன்வலவின் பிரதிநிதி ஜப்பான் செல்வார்
ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் வழங்கியதாக கூறப்படும் கலாநிதி பட்டத்தை எடுத்து வருவதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரதிநிதியொருவர் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மிக விரைவில் அந்தப் பல்கலைக்கழகத்துக்குப் புறப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டதாகவும் அதனால் அது இணையத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெறப்பட்ட கலாநிதி பட்டச் சான்றிதழ்களை மட்டுமே பல்கலைக்கழகம் ஒன்லைனில் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தன்னுடைய கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான திறன் தன்னிடம் உள்ள நிலையிலும் அரசாங்கம் மற்றும் எம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு அவமானம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ளார்.
ஆனால், தற்போது கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டியதாலும், அந்த ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு கலாநிதி பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தொடர்புடைய கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்கும் திறன் என்னிடம் உள்ளதால் விரைவில் அவற்றை சமர்ப்பிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
![]()