ரணிலுடன் இனி கூட்டில்லை பிரிந்து செல்லும் பங்காளிகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் இனி எந்த தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலிண்டருக்குள்ளும் கட்சிக்குள்ளும் பல வாரங்களாக இழுத்தடிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவிப் பிரச்சினை கடந்த வாரம் இரு கட்சிகளினதும் அந்தந்த எம்.பி.க்களின் நியமனத்துடன் முடிவுக்கு வந்தது.

சிலிண்டரில் முன்னாள் அமைச்சராக இருந்த பைசர் முஸ்தபாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியில் சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் மொஹமட் ஸ்மைல் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இவ்வாறே கடந்த வாரம் தேசியப் பட்டியலுக்கான பெயர்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதற்குப் பின்னால் இரு தரப்பினராலும் பெரும் எண்ணிக்கையிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் பைசர் முஸ்தபா தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே முதலில் தேசியப் பட்டியலுக்கூடாக பாராளுமன்றம் செல்ல தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சன விஜேசேகர, தலதா அத்துகோரல, சாகல ரத்நாயக்க, ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்களை ரணிலின் ஊடக அணியினர் பல்வேறு வேளைகளில் நாட்டுக்கு பொய்யாக காட்டுவதற்காக பரப்பிய போதிலும் அந்தப் பெயர்களை நாட்டுக்கு காட்டி தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை பெற ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் ரவி கருணாநாயக்கவும் பைசர் முஸ்தபாவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் ரணில் விக்ரமசிங்கவுடனோ ஐக்கிய தேசியக் கட்சியுடனோ எந்தவொரு அரசியல் பயணத்தையும் மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனி தயாராக இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த அரசாங்கத்தில் ரணிலுடன் இணைந்து செயற்பட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கடந்த வாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவின் வீட்டில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரணிலுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ள இனி இடமில்லை என்றும் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *