2024 ஆண்டிற்கான மிக பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் திறந்து வைப்பு !

பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 2024ஆண்டிற்கான மிக பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் 2024.12.15 அன்று கிறிஸ்து பிறப்பு இன்னிசை வழிபாட்டை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு கல்லாறு மெதடிஸ்த திருச்சபை வாலிபர்  ஐக்கிய உறுப்பினரான நியூசிலாந்தில் வசித்து கொண்டிருக்கும் திருவாளர். றொசானந்த் அவரின் முழு அனுசரணையோடு கல்லாறு திருச்சபையின் சபைக்குரு அருட்திரு S.திருமறைதாசன் மற்றும் சேகர குருமார்களினாலும் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை மக்களினாலும் வெகுவிமர்சையாக இனிப்பு பண்டங்கள் வழங்கி கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் முகமாக திறந்து வைக்கப்பட்டது

இதில் சிறப்பம்சமாக இந்த கிறிஸ்மஸ் மரத்தினை அலங்கரிப்பதற்கு 30,000த்திற்க்கும் மேற்பட்ட LED மின்குமிழ்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *