பாதுகாப்பு அச்சுறுத்தல் பயணங்களைக் குறைத்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணியாளர்களை குறைப்பதற்கான செயற்பாட்டின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளமையால் அவர் தனது பயணங்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் 116 பொலிஸார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 38 பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளில் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் தன்னுடைய பாதுகாப்பு கருதி பங்குபற்றும் நிகழ்வுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் எவ்வித அடிப்படைகளும் இன்றி தன்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் பாதுகாப்பு வித்தியாசமானதாகும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டே பாதுகாப்பை குறைக்க வேண்டுமெனவும் ஒரே சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை குறைப்பது சரியான நடவடிக்கை அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஓய்வு பெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 இல் கடமையாற்றிய 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்குகின்றனர். இங்கு நான்கு காவல் ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் கிட்டத்தட்ட 38 பொலிஸ் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஓய்வு பெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *