சிரியாவின் கிளர்ச்சியாளர்களிற்கு உக்ரைன் ஆளில்லா விமானங்களை வழங்கியது

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்கு முன்பாக உக்ரைன் அவர்களிற்கு 150 ஆளில்லா விமானங்களையும் அவற்றை இயக்குவதற்காக 20 பேரையும் வழங்கியிருந்தது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் இராணுவநடவடிக்கைகளுடன் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் இதனை தெரிவித்துள்ளது.

மத்தியகிழக்கில் ரஸ்யாவையும் அதன் சிரிய சகாவையும் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாக உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் நான்கு ஐந்து வாரங்களிற்கு முன்னர் ஆளில்லா விமானங்களை வழங்கியிருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் புலனாயவு பிரிவின் முகவர்கள் சிரியாவின் இட்லிப்பில் காணப்படுகின்றனர் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் செப்டம்பர் மாதம் சிரிய செய்தித்தாள் ஒன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் முகவர்கள் புதிய தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்,கிளர்ச்சிக்காரர்களை சேர்க்கின்றனர் என அவர் தெரிவித்திருந்தார்.

உக்ரைனின் பிரதான புலனாய்வு பிரிவு சிரியாவின் இட்லிப்பில் காணப்படுகின்றனர் என கடந்த மாதம் சிரியாவிற்கான ரஸ்யாவின் விசேட பிரதிநிதி தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button