சிலியில் ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்!

தென் அமெரிக்க நாடான சிலியில் காற்று மாசடைவதைத் தடுக்கும் விதமாக முதன்முறையாக ஹைட்ரஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் பட்டரி பேருந்தை அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதன்போது பெட்ரோல், டீசல் மூலம் ஏற்படும் காற்று மாசை குறைப்பதற்காக இவ்வகை பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹைட்ரஜன் பேருந்தானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீற்றர் தூரம் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *