குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த முன்னோடித் திட்டத்திற்காக விவசாய அமைச்சினால் 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குரங்குகளுக்கு கருத்தடை செய்வதற்கு கால்நடை வைத்தியர்களின் உதவிகள் பெறப்படும் எனவும், இந்த முன்னோடித் திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

பொறி கூண்டுகளைப் பயன்படுத்தி பிடிபடும் குரங்களை, கிரிதலே விலங்குகள் நல மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் நீக்கம் அப்பகுதிக்கு கொண்டுவந்து விடப்படும் என்றும் அவர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *