போராட்டத்தை புகைப்படம் எடுத்த இராணுவ புலனாய்வாளர் விரட்டியடிப்பு
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர் போராட்டகாரர்களினை அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்த போது, அவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டார்.
இதன்போதே போராட்டகாரர்களை அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்த இராணுவ புலனாய்வாளரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர்
![]()