இலங்கையர் இருவர் அமெரிக்காவினுள் நுழையத் தடை!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பயணத் தடைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எயார் பஸ் மற்றும் மிக் விமான கொள்வனவு திட்டத்தில் அவர்கள் செய்ததாகக் கருதப்படும் நிதி மோசடி சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார் பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தனிப்பட்ட முறையில் பயனடைந்த குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரிவு 7031(சி) இன் கீழ், இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()