தமிழ் கூட்டமைப்புக்கு மீள உயிரூட்ட முயற்சி!

முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமாஎன்பது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மற்றும் முன்னாள் எம்.பி. வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு கையளிக்கப்பட்ட நிகழ்வில்

கலந்துகொண்ட பின்னரேஇவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யுடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (நேற்று)நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக்குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன . அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும். எனவே இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணையவேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள்.

எனவே பாராளுமன்றுக்குள்ளும் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொதுவிடயங்களில் ஒன்றாக குரல்கொடுக்கும் நிலையினை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் வடகிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமாஎன்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *