இந்தியா

மோசமான காலநிலை; தற்காலிமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்

பெஞ்சல் புயல் காரணமாக இந்தியாவின் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமானத்தை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள காரணத்தினால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வங்காள விரிகுடாவில் உருவான பெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது.

இதன்காரணமாக , நள்ளிரவு முதல் சென்னையில் கன மழை பெய்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *