முச்சந்தி

பல்கலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் உயிரிழப்பு – 35 பேர் காயம்

பதுளை – மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை 08.00 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button