கவிதைகள்

வேண்டும் !… கவிதை… ஜெயராமசர்மா

அகமும் முகமும் மலர வேண்டும்
அறிவும் அன்பும் பெருக வேண்டும்
கறையும் களவும் அகல வேண்டும்
கயமை மறைந்து ஒழிய வேண்டும்

இறையின் நினைப்பு இருக்க வேண்டும்
எண்ணம் தூய்மை ஆக வேண்டு
பொறையும் அன்பும் பெருக வேண்டும்
புவியில் வாழ்வு சிறக்க வேண்டும்

கற்றார் நட்புப் பெருக வேண்டும்
கருத்தில் கண்ணியம் நிறைய வேண்டும்
உற்றார் உயர்வோர் மதிக்க வேண்டும்
உலகோர் மதிக்க வாழ்தல் வேண்டும்

பொய்மை என்பது பொசுங்க வேண்டும்
மெய்மை பூத்துக் குலுங்க வேண்டும்
செய்கை நல்லதாய் அமைய வேண்டும்
சிந்தனை இறையை நாட வேண்டும்

சூதும் வாதும் ஒழிய வேண்டும்
சொல்லில் தூய்மை நிறைய வேண்டும்
பேதம் மனதில் அகல வேண்டும்
பெம்மான் நினைப்பே நிறைய வேண்டும்

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்த்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *