13 குறித்த ஜே.வி.பி.யின் கருத்து தமிழர்களுக்கு விழுந்த முதல் அடி

13 ஆவது திருத்தம் அல்லது அது போன்ற அதிகாரப் பகிர்வு தேவை இல்லை என தெரிவித்த ஜே.வி.பி.யின் பொது செயலாளரின் கருத்து தமிழர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது அடி என முன்னாள் பாராளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியளாலர் சந்திப்பில் இதனை சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம்,

மேலும் தெரிவிக்கையில்,

சுனாமியால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக் கூடாது என்பதற்காக, அதனை எதிர்த்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணியினர்.

அண்மைய தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இந்த பின்னணியில் மாற்றம் ஒன்று வரும் என நம்பியவர்களுக்கு, அந்த கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என கூறுகின்றார்.பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று கூறுகின்றார்.

ஜே.வி.பி.யின் பொது செயலாளரின் இந்தக் கருத்து தமிழர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது அடியாகும். எனினும் இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை.

இந்த பின்னணியிலேதான் அவருடைய அமைச்சரவையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் அனைத்தும், ஜனாதிபதியின் கருத்துக்கள்தான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button