ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் விமானிகள் மோதல்; தொக்கி நிற்கும் விசாரணைகள்!

சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி கடந்த செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதியன்று வந்த யுஎல் 607 விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிட்டினியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த குறித்த விமானத்தில், விமானிகள் கடும் வாய்த் தகராறில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஏர்பஸ் ஏ330 விமானி அறையிலிருந்து பூட்டப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் யுஎல் 607 விமானத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் திங்கட்கிழமை (14) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தது.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்தின் துணை விமானி கழிவறைக்குச் சென்று திரும்பிய போது விமானி அறைக்குள் நுழைவதற்கான கதவை பிரதான விமானி திறக்காததால் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடுகிறது.

விமானிகளுக்கு இடையே ஏற்கபட்ட தகராறில் இந்த நிலை ஏற்பட்டது.

விமானத்தின் கப்டன் பின்னர் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விமான நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில் கப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளது என்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button