கவிதைகள்

வகுப்புத் தோழி… கவிதை… முல்லை அமுதன்

நடைப் பயிற்சிக்கு அழைத்தாள்.
மகளின் வேகத்திற்கு
நடக்க முடியவில்லை..

சிறுவயதில்
வளர்பிறை,தேய்பிறைக் காலங்களில்
போட்டி போட்டு
நடந்து வெற்றி கொண்டதாகப் பீற்றிக்கொண்டதும்,
வகுப்புத் தோழியிடம்
பந்தயம் கட்டி
பேச்சுப்போட்டியில்
வெற்றியீட்டியமையும் ஞாபகத்தில் வந்தது.

பின்னாளில், நண்பர்களுடன்
பந்தயம் கட்டி
பிரமிளாவிற்கு காதல் கடிதம்
கொடுத்தபோது தான் தோல்வியை உணர்ந்தேன்..

மறுநாள் திருமண அழைப்பிதழைத் தந்துசென்றாள்.
எல்லாத் தோல்விகளையும் கடந்துவந்தாயிற்று.
மனைவியிடம், இப்போது மகளிடம்,

நாளை பெயர்த்திகளிடமும் தோற்கலாம்..
இப்போதெல்லாம் வலிப்பதில்லை.

முல்லை அமுதன்
11/10/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *