ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை பலி!

இந்தியா – பெங்களூரூவில் உள்ள புவனேஸ்வரி நகரில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டு கேன்சல் ஆன கேக்-ஐ ஸ்விக்கி டெலிவரி ஊழியரான பாலராஜ் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த கேக்கை வீட்டில் உள்ள அவரது மனைவி மற்றும் 5 வயது குழந்தையுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.

கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவரது 5 வயது குழந்தை உயிரிழந்த நிலையில், மனைவியும் அவரும் சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், food poisoning காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டர்களா அல்லது கேக்கில் வேறேதும் கலந்து தற்கொலை முயற்சியா என விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *