கவிதைகள்
பாட்டி… கவிதை… முல்லை அமுதன்

அப்பாச்சி என்றே அழைத்தபடி
பேரன்
அவளிடம் நெருங்கவும்,
தயாராகவைத்திருந்த
கச்சான் சுருளைக் கொடுத்தாள்
அந்த பாட்டி…
சிறுவனாக இருக்கையில்
இப்படியே எனக்கும் தந்திருந்தாள்.
காசு வாங்கியதில்லை..
வெற்றுக் கடகத்தைத் தூக்கியபடி நடப்பாள்..
‘இப்பவாவது காசை வாங்கிக்கொள் பாட்டி’
‘போடா போ…
ஒரு நாள் இந்த அனாதைப்
பாட்டிக்கு கொள்ளி போடு பேரா’
அழுத்திச் சொல்லிய படி
நடந்து இருளில் மறைந்துவிடுவாள்..
முல்லை அமுதன்
29/09/2024
![]()