அலுமாரிக்கு மேல் ஹாயாக படுத்திருந்த 9 அடி ராஜ நாகம்

தற்பொழுது மனிதர்களைப் போல் பாம்புகளும் வீட்டுக்குள் சந்தோஷமாக நடமாடத் தொடங்கிவிட்டன.

வொஷிங் மெஷினுக்குள் பாம்பு, குளியலறையில் பாம்பு, சப்பாத்துக்குள் பாம்பு என சர்வ சாதாரணமாக பாம்புகள் வீட்டுக்குள் வந்து அமர்ந்துகொள்கின்றன.

அப்படியொரு சம்பவம்தான் இந்தியாவின் கர்நாடக மாநிலம் அகும்பேயிலுள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.

குறித்த வீட்டின் படுக்கையறையில் இருந்த அலுமாரியின் மேல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் 9 அடி நீளமான ராஜ நாகம் இருந்துள்ளது.

பயத்தில் உறைந்த வீட்டினர் உடனடியாக பாம்பு மீட்புக் குழுவினரை அழைக்க,சிறிது நேரத்தில் வந்த மீட்புக்குழுவினர், பாம்பை மீட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு சேர்த்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *