தெரியாதவர்களிடமிருந்து இனி அழைப்பு வராது: வெளிவரவுள்ள வாட்ஸ் அப் புது அப்டேட்

வாட்ஸ் அப் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளமாக உள்ளது. அந்த வகையில், நமது தொலைபேசி எண் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நமக்கு அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்ப முடியும்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஸ்பேம் மெசேஜ் அனுப்புதல், வொய்ஸ் மெசேஜ் அனுப்புதல், தேவையற்ற லிங்க் அனுப்புதல் போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கு விரைவாக அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் கொண்டுவரவுள்ளது.

அதாவது தெரியாத நபர்களிடமிருந்து வரும் ஸ்பேம் அழைப்புக்களை மக்களே எளிதாக தடுக்க முடியும். இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button