பூமிக்குள்ளே காத்திருந்த அதிசயம்!

பார்பிடோஸ் தீவுக்குள் உள்ள மலைப்பகுதியில் சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தைக்கொண்ட பூமிக்குள்ளே அமைந்திருக்கும் வியக்கவைக்கும் குகைக்குள் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது இதற்குள் உள்ளிட 60 அமெரிக்க டொலர்களை அறவிடுகின்றனர். சுமார் 30 பேர்கள் பயணிக்கக்கூடிய மின்சார டிராம்” வண்டிகள் பயணப்படுத்தப்படுகின்றன.

அந்த குகை பற்றிய வரலாறுகளையும் விவரிப்பதற்காக ஒரு வழிகாட்டி எம்மோடு பயணித்தார் அதன் உள்ளே சென்றபோதுதான் பூமிக்குள் இருக்கும் பல்வேறு அதியசயங்களை பார்க்க முடிந்தது . அதன் உள்ளே ஆங்காங்கே சிறிய ஓடைகளை பார்க்க முடியும் அந்த நீர் 99 வீதம் சுத்தமான நீர் என்று விளக்கினார்கள் குகையின் உச்சியில் குமிழ் குமிழ்களாக வளர்ந்திருக்கும் நீளமான கண்னாடி போன்ற அத்தனையும் கல்சியமாம் அவற்றிலிருந்துதான் கல்சிய மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாகவும் விபரிக்கப்பட்டது.

அங்கெ நீரோடையை மட்டும் காணவில்லை நீர் வீழ்ச்சிகளையும் காண முடிந்தது. பூமிக்குள் இன்னொரு உலகம் இருப்பதை நேரில் காணமுடிந்தது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு பிக்கு இராவணன் வாழ்ந்ததாக சொல்லப்படும் குகையும் இராவணனின் தர்பாரும் இருப்பதாக சொல்லியிருந்தது உண்மைதானோ என்று எண்ணத்தோன்றியது. குகைக்குள் உள்ளிடுவதற்கு முன்னர் நீண்டதொரு விண்ணப்படிவத்தை நிரப்பி கொடுக்கவேண்டும் குகைக்குள் போகும் ஆர்வத்தால் எதையும் வாசிக்காமல் எமது விபரங்கள் உட்பட அனைத்தையும் நிரப்பிக்கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம் .

No photo description available.

சுமார் ஒன்றரை மணித்தியால பயணத்தின் பின்னர் ஒரு வளைவில் டிராமை நிறுத்திய அவர்கள் உள்ளே அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு அவர் சொன்னதுதான் என்னை கலங்கடித்தது சில வருடங்களுக்கு முன்னர் அதே இடத்தில் மின்சாரம் தடைப்பட்டதால் சுமார் 17 மணிநேரத்துக்கு பின்னர்தான் வெளியில் செல்ல நேரிட்டது என்றார்.

இதற்கு பிறகுதான் எனக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்தது” பயத்தோடு வேர்க்கவும் ஆரம்பித்தது வரதா” குடும்பத்தோடு வந்து மாட்டிக்கிட்டியா ” என்றுதான் எனினும் உள்ளே பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது எப்படியாயினும் பயம் யாரை விட்டது? வெளியில் வந்த பின்னர்தான் அவர்கள் தந்த விண்ணப்பபடிவத்தை வாசித்துப்பார்த்தேன் அப்போதுதான் தெரியவந்தது உள்ளே விபத்துகள் ஏற்பட்டு உங்களுக்கு எது நேர்ந்தாலும் அதற்கு பொறுப்பு நீங்களே என்று குறிப்பிடப்பட்டிருந்தது அப்போதுதான் எனக்கு இன்னும் வேர்த்து வடிந்தது.

No photo description available.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button