ஓநாய்கள் தாக்கி 7 பேர் உயிரிழப்பு; உறக்கமின்றி பீதியில் உறைந்த கிராம மக்கள்

இந்தியா, உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம், மஹாசி தொகுதியிலுள்ள 30 கிராமங்களில் ஓநாய்களின் தாக்குதலுக்குள்ளாகி 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இக் கிராமங்களில் அடிக்கடி ஓநாய்கள் தாக்குதலை மேற்கொள்வதால் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் உறக்கமின்றி இரவு நேரங்களில் காவல் காத்து வருகின்றனர்.

ஓநாய்களை பிடிப்பதற்காக வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.

ட்ரோன்களின் உதவியுடன் இவர்கள் ஓநாய்களை தேடி வருகின்றனர்.

இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவற்றை உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மனிதர்களை மட்டுமே தாக்கும் 6 ஓநாய்கள் இப் பகுதியில் உள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 வருடங்களின் பின்னர் ஓநாய்கள் இப் பகுதிக்கு திரும்பியுள்ளதாகவும் 2004ஆம் ஆண்டில் ஓநாய் தாக்குதல்களினால் 32 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இரவு நேரங்களில் குழந்தைகளுடன் வெளியில் உறங்க வேண்டாம் என அப் பகுதி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button