2025-ல் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பெப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார்கள்.

அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் செல்லும் 2-ஆவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும். கடந்த மாதத் தொடக்கத்தில் அது முதல்முறையாக விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.

இருந்தாலும், அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டாா்லைனா் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

பின்னர் அவா்கள் இருவரும் அதே விண்கலம் மூலம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மீண்டும் பூமி திரும்புவதாக இருந்தது. இருந்தாலும் தொழில்நுட்ப பிரச்னைகள் காரணாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அவா்கள் இருவரும் ஜூன் 26ஆம் தேதி பூமி திரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அந்தத் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார்கள.

போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *