இவர்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மீண்டும் அதிகாரத்தில் அமர்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன

மீண்டும் அதிகாரத்தில் அமர்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழில்  ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மக்களுக்கு பாதிப்பு வரும் என்று தெரியாமல்தான் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்து இருக்கின்றது என்ற கேள்வி நிலவுகிறது.

அப்படியென்றால் தேர்தல்கள் திணைக்களம் பொறுப்பற்று செயல்படுகிறது என்று ரணில் விக்கிரமசிங்க செல்ல வருகிறார் என்ற கேள்வி இங்கே காணப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க நேர்மையானவராக இருந்தால் இலங்கையின் தோல்விக்கு காரணமாக இருக்கும் இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு தோல்வி நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கின்றது என ஒப்புக்கொண்டு சமஷ்டி கட்டமைப்பு கொண்டு வர வேண்டும என வௌிப்படையாக மக்களுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.

இவ்வாறு எதுவும் தெரிவிக்காமல் ஒற்றையாட்சிக்குள் இந்த நாட்டை கட்டியொழுப்புவேன் என்பது எல்லாம் எமாற்று நடவடிக்கை மீண்டும் அதிகாரத்தில் அமர்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன இவர்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button