அமெரிக்கா புதிய அத்தியாயத்திற்கு தயார்: பராக் ஒபாமாவின் ஆதரவு கமாலா ஹாரிஸுக்கு

கலமா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்கா புதிய அத்தியாயத்திற்கு தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு  செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நிலையில், இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

“வாக்காளர்கள், நம்பிக்கை கொண்டோர் மீது உறுதியாகப் போராட வேண்டும். கமலா ஹாரிஸுக்கு அமெரிக்கா வாய்ப்பளித்துள்ளது. அதனால் அவர் இன்று தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா கொடுத்த வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கு வழங்க அர்ப்பணித்துள்ளார். அதனால் நான் கமலாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்” என்றார்.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button