இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் அதற்கான சிறந்த மற்றும் கடைசி வாய்ப்பாக அமையலாம் என இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

எனவே, காசா பகுதியில் போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் என்று பிளிங்கன் கூறியுள்ளார்.

அத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை எகிப்தின் கெய்ரோவில் இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடலின் போது போர்நிறுத்த உடன்பாடு எட்டப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க இராஜாங்க செயலாளர் தூதரக மட்டத்தில் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button