ரணில் முறையற்ற விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார்!

தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டி மல்வத்து பீட மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் ஊழல் மோசடி இடம்பெற்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தம்மிடம் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே, ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் ஆளுநர்களாகவும் உள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button