இலங்கை சரணாலயங்களில் உள்ள உயிரினங்களையும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு

‘சாங் ஆஃப் தி எர்த்’ வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 9,10,11 ஆம் திகதிகளில் லியோனல் வென்டில் ஆர்ட் கெலரியில் இடம்பெறவுள்ளது.

வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியை நடத்த CHE குழு தயார்படுத்திவருகின்றது.

இக்கண்காட்சியில் இலங்கையில் உள்ள அனைத்து வனவிலங்கு சரணாலயங்களிலும் சிறிய எறும்பு முதல் வலிமைமிக்க யானை வரை படம்பிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட சித்திரங்கள் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இயற்கை மற்றும் விலங்கினப் பிரியர்களை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொக்கிஷங்களைப் பார்த்து மகிழும்படி CHE குழு அன்புடன் அழைக்கிறது.

இதற்கான நுழைவு முற்றிலும் இலவசம் என்பதுடன் கேலரி காலை 10 முதல் இரவு 7 வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *