உடம்பில் உள்ள கழிவை வெளியேற்ற உதவும் 3 பானங்கள்

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை பலர் சந்திக்கின்றனர்.

அஜீரணம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியான இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில் வயிற்றின் செயல்பாடுகளை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் வயிற்றி உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் இந்த பானங்களை தினமும் காலை எழுந்ததும் குடித்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

Oruvan

சீரக நீர்

சீரக நீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் மேம்படும். சீரகத் தண்ணீரைக் குடிப்பதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

சீரகத் தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும்.

கற்றாழை சாறு

மலச்சிக்கல் பிரச்சனையை போக்க கற்றாழை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் கற்றாழை சாறு எடுத்துக்கொள்ளலாம்.

கற்றாழை சாற்றை சிறிய அளவில் குடிக்கத் தொடங்குங்கள். வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கற்றாழை சாற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.

தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்து வந்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *