கனடாவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

கனடாவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைந்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நால்வர் மீட்கப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் மற்றும் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவதாக ஸ்ட்ராட்ஃபோர்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button