ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்மிக்க பெரேராவிற்:கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதகா ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஸவினால் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தை முறையாக நடத்தி செல்வதற்கு கட்சி என்ற விதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவர் கூறுகின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *