பாடசாலை செல்ல மறுத்த பேரன்; சமாதானப்படுத்தி அழைத்துச் சென்ற ரஜினி

நிஜ வாழ்விலும் சரி சினிமாவிலும் சரி ரஜினிகாந்த் சூப்பர் ஹீரோதான்யா என்று கூறுமளவுக்கு அவரது இயல்பான நடத்தை அமைந்திருக்கும்.

என்னதான் படங்களில் பிஸியாக நடித்தாலும் குடும்பத்தைக் கவனிக்கவும் அவர் என்றும் தவறியதில்லை.

இதற்கு உதாரணமாக இன்றொரு சம்பவம் நடந்துள்ளது.

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் மகன் பாடசாலை செல்ல மாட்டேன் என பிடிவாதம் பிடித்துள்ளார்.

பிடிவாதம் பிடித்த பேரனை சமாதானம் செய்து அவரது தாத்தா ரஜினியே அவரை பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது சௌந்தர்யாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

அப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *