ஜனாதிபதி வேட்பாளர் யார்?: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மகிந்த தரப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாகவே வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பொதுஜன பெரமுன தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உடனடியாக அறிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன அறிவிக்க உள்ளது.

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் இந்த விவகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஈடுபட உள்ளதாக தெரியவருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button