“நாங்கள் நல்ல மனிதர்கள்”: இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் வீரர்

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சொய்ப் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 2008ஆம் ஆண்டு முதல் அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானால் நடத்தப்பட உள்ளது.

எனினும், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி இந்தியா அணி தொடரில் விளையாட மறுத்துள்ளது.

இந்நிலையிலேயே, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என சொய்ப் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அரசியல் பிரச்சினையை விளையாட்டில் காட்டக்கூடாது, கடந்த ஆண்டு பாகிஸ்தான் இந்தியா சென்றிருந்தது.

தற்போது இந்திய அணிக்கு நல்லவாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இந்திய அணியில் பாகிஸ்தானில் விளையாடாத பல வீரர்கள் உள்ளனர், இது அவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் நல்ல மனிதர்கள், நாங்கள் மிகவும் விருந்தோம்பும் நபர்கள், எனவே இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் வர வேண்டும் என்று நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button