ஜனாதிபதி வேட்பாளர் யார்?: பெரமுனவின் தீர்மானம் அடுத்த வாரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளர் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை (29) தீர்மானிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் எனவும், வேட்புமனுக்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா இன்று பிணைப்பத்திரங்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button