எத்தியோப்பிய மண்சரிவு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்வு

எத்தியோப்பியா கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதி இறப்பு எண்ணிக்கை 500 வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்ததுடன் மண்சரிவுகளும் பதிவாகின.

சீரற்ற வானிலை காரணமாக 19,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்படவேண்டிய கட்டயாத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *