தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 81 ஆகும். விக்கிரமபாகு கருணாரத்ன, இடதுசாரி அரசியலுக்காகத் தன் இன்னுயிரை தியாகம் செய்து, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன் கொள்கைகளுக்காக நின்று போராடிய ஒரு விதிவிலக்கான தலைவர் ஆவார்.

அவரது மறைவு நாட்டின் இடதுசாரி அரசியலில் ஒரு அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.

எவ்வாறாயினும், விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button