உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பதவியேற்று 64 வருடங்கள்
உலகின் முதல் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா, அப்பதவியை ஏற்று 64 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
திருமதி பண்டாரநாயக்காவின் கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1960 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அன்று கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானார்.
1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மொத்தமாக 10, 22, 171 வாக்குகளைப் பெற்றதுடன் 75 ஆசனங்களைப் பெற்றது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதல் பிரதமரானார்.
இலங்கையை அணிசேரா நாடாக மாற்றும் முயற்சிக்கு அவர் தலைமை தாங்கினார். 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் திருமதி பண்டாரநாயக்கா பிரதமராகப் பதவி வகித்தார். பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபடுவதற்காக 1972 இல் முன்வைக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்பின் மூலம் இலங்கையை இறையாண்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கு இவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களித்துவிட்டு நிட்டம்புவ ஸ்ரீ சங்கபோதி கல்லூரியில் இருந்து கொழும்புக்கு வந்துகொண்டிருந்த போது, வழியில் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அவர் மரணமடைந்தார்.
![]()