மஹிந்த, கிழக்கு ஆளுநருடன் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்த சந்திப்பு இன்று (19) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

கிழக்கு ஆளுநருடன்….

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகைதந்துள்ள ஸ்காட் மொரிசன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை, கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிழக்கு மற்றும் மரையக பகுதிகளில் மனிதவள வளர்ச்சி குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மனிதவளத்தை ஊக்குவித்தல், அதை நவீனப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இது தொடர்பான வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலியாவுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து இருவரும் ஆராந்துள்ளனர்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button