பழங்களின் ராஜா துரியன்; இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

துரியன் பழம் பழங்களின் ராஜா என கூறப்படுகிறது. இந்த துரியன் பழம் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான சுவையில் கிடைக்கிறது.

அந்த வகையில், சிங்கப்பூரில் புக்கிட் மேரா என அழைக்கப்படும் இனிப்பும் கசப்பும் கலந்த சுல்தான் துரியன், தாய்லாந்தில் காரமும் இனிப்பும் கலந்த மான்தோங் துரியன், மலேசியாவில் இனிப்பும் க்ரீம் சுவையும் கொண்ட கறுப்பு முள் துரியன், இந்தோனேஷியாவில் கிடைக்கும் இனிப்பும் கசப்பும் கலந்த பச்சை துரியன். இவ்வாறு பல சுவைகளில் கிடைக்கின்றன.

துரியன் பழத்தில் விட்டமின் சி, நியாசின், போலிக் அமிலம், தியாமின், பி-6, விட்டமின் ஏ போன்ற சத்துக்களும் இரும்பு, கல்சியம், சோடியம், துத்தநாகம், பொஸ்பரஸ், புரதம், நீர் போன்றவை உள்ளன.

  • துரியன் பழத்தில் குழந்தைப் பேறு உண்டாக்கும் சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • குடல் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.
  • நோய்களை தடுக்கிறது.
  • இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் இப் பழத்தை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இரத்த சோகையை நீக்குகிறது.
Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button