16 வயதேயான யார் இந்த சிறுவன்?; ஏன் Football உலகம் இன்று இவனைக் கொண்டாடுகிறது?

Barcelona மிகப்பெரிய சரிவில் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரம் , தொடர்த் தோல்விகள் , வீரர்கள் பற்றாக்குறை அனைத்தும் பாதாளத்தை நோக்கி இருந்தது. Barcelona வின் Talent Factoryஎன செல்லமாக அழைக்கப்படும் “La Masia” அதிக திறமைவாய்ந்த வீரர்களை உலகிற்கு அறிமுகம் செய்வது வழைமை அது போன்றே அப்போது Pedri,Gavi,Garcia என்று ஒரு பட்டாளமே அறிமுகமானது அவ் அறிமுகத்துடன் La Masia மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது.

Xavi இன் வருகையின் பின்னர் பொருளாதார பிரச்சனையை சமாளிப்பதற்காகவும் அதிக திறமைவாய்ந்த La Masia playersஐ அதிகம் உள்வாங்கவும் ஆரம்பித்தது Barcelona அவ்வாறு அறிமுகம் ஆகியவர்களே Fermin lopez , Lamine Yamal, pau Cubarci போன்ற என்னைக் கவர்ந்த வீரர்கள்.( பெயர் குறிப்பிடாமல் பலர் இருக்கின்றனர்)

Lamine Yamal அறிமுகமாகும் போதே சிறுவயதான இவனுக்கு ஏன் முன்னுரிமை என்றே அனைவருக்கும் தேன்றியது.அனைவரின் கேள்விக்கும் முதல் போட்டியிலயே பதில் கூறினான் நேர்த்தியான மெய் மறக்கச் செய்யும் விளையாட்டு. Passing ,Quick Dribbiling, shooting accuracy எல்லாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருந்தது. Barcelonaவிற்கு ஒரு முன்கள வீரன் கிடைத்து விட்டான் என்றே அப்போது தோன்றியது ஆனால் அது உன்மை இல்லை.
அடுத்தடுத்த போட்டிகளில் இவன் திறமை அளவு கடந்தே போய்க்கொண்டு இருந்தது.
Left foot forward with Excellent Dribbling, Accurate passing, Chance creating ability ,Quick Flank ,Quick Throw , Rotating போன்ற மிக நுட்பமான விளையாட்டை இயற்கையாகவே வெளிக்காட்டுகிறான் ஒட்டுமொத்த Spainமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.(இதற்கு முன் அவர்கள் அவ்வாறு பார்த்தது Messi ஐ) இவனது விளையாட்டில் ஆங்காங்கே Neymarஇன் சாயல் இருப்பது உனர முடிகிறது.
National Duty அழைப்பு Spainஇல் அதிகம் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை சமீபத்தில் ஆரம்பித்தவர் Luis Enrique.

அவரிட்ட பாதையில் Yamal உம் உள்வாங்க படுகிறான் தற்போதைய Manager இனால். Spain இன் எதிர்காலம் இவர்கள்தான் என்று முடிவிற்கு வருகிறார்கள் ரசிகர்கள். காரணம் Nico Williams, Dani Olmo, Yamal உடனான இளம் Spain பட்டாளம் பார்ப்போரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது. Barcelona வில் காலாதிகால Rivalryயான Real Madrid இன் Home Ground Santiago வில் ஒரு Barcelona வீரனுக்கு Standing ovation நடைபெறுகிறது. (இவ்வாறு இடம் பெற்றதை நான் பார்ப்பது 2வது தடைவை இதற்கு முன் Ronaldhinoவிற்கு நடைபெற்று பார்த்த நியாபகம்) சடுதியாக சுருட்டை முடி வாயில் பல் நேர்த்திக்காக கிளிப் அணிந்த சிறுவனின் Market Value இமையம் தொடுகிறது.

Spain மற்றும் Wold Football Euro2024 இன் பக்கம் திருப்புகிறது. சற்றே பின்னடைவான Defence உடன் மிகப்பலமான முன்களப் படையுடன் வருகிறது Spain வந்த வேகத்தில் முதல் இரண்டு பயிற்ச்சி போட்டிகளில் பாரிய வெற்றி 5:0 மற்றும் 5:1 என்னும் Goal அடிப்படையில்.

Euro2024 இல் Croatia வை 3:0 என வீழ்த்துகிறது Spain. சிறுவன் Yamal அற்புதமாக Perform செய்கிறான் அடுத்து நடப்பு Champion Italy ஐ 1:0 என தோற்கடிக்கிறது இதிலும் சிறுவன் சிட்டாய்ப் பறக்கிறான். அடுத்ததாக Albania வை1:0 எனவும் Georgia வை 4:1 எனவும் வீழ்தியதன் மூலம் Yamal புகழ் விண்ணைத் தொடுகிறது.

Knock-out stage ஆரம்பம் Germany மிகப்பலம் பொருந்திய எதிரி அவ் அணியையும் நிலைகுலைய செய்து கண்ணீருடன் வழியனுப்புகிறது Spain. நேற்றைய போட்டி France vs Spain, Spain மீது அதீத நம்பிக்கை இருந்தாலும் France இல் Kante மற்றும் Saliba மீது சற்றே பயம் இருந்தது. அவர்களையும் Euroவின் இளம் வயது Goal Scorer என்னும் சாதனையுடனும் Perfect timing tackle க்காக Yellow card உம் பெற்று Franceக்கு கண்ணீரைப் பரிசாக வழங்கினான் 16 வயது சிறுவன் Lamine Yamal இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை Defence இல் சற்று சறுக்கல் என்றாலும் DMFஇல் ஒற்றை மனிதன் Rodri இல் நம்பிக்கை இருக்கிறது.
Golden Boy விருதுக்கு 90%வாய்ப்பு இருந்தாலும் Euro2024 இன் சிறந்த வீரர் விருதும் Yamalக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button